"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??!" - வெற்றிகரமாக ரிலீசானது சிம்புவின் 'மாநாடு'..!

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் இன்று வெற்றிகரமாக தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. படத்தை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள படம் ’மாநாடு’. இப்படம் நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. மேலும், திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கியது.

ஆனால், நேற்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்" என தெரிவித்திருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சில நிதி நெருக்கடிகள் சரிசெய்யப்பட்டு சொன்னபடி இன்று மாநாடு படம் ரிலீசாகும் என தகவல் வெளியானது.

அதன்படி, இன்று வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாநாடு திரைப்படம். படத்தை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, "எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??!" என பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்