கங்கனா ரனாவத் மீது சீக்கிய தலைவர்கள் புகார்!

கங்கனா ரனாவத் மீது சீக்கிய தலைவர்கள் புகார்!

சீக்கியர்கள் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டதாக சீக்கிய தலைவர்கள் நடிகை கங்கனா ரனாவத் மீது புகார் அளித்துள்ளனர்.

நடிகை கங்கனா சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக் கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதனால் பல பிரச்சனைகளையும் அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்தார்.

அப்போது விவசாயிகளை பயங்கரவாதிகளோடு ஓப்பிட்டும், சிக்கியர்கள் குறித்தும் சர்ச்சை கருத்தை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் நடிகை கங்கனா ரனாவத்.

இந்நிலையில் தங்களது உணர்வுகளை புண்படுத்தியதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது சீக்கிய தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். எஃப்ஐஆர் பதிவு செய்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்