நியூயார்க் டைம் ஸ்கொயரில் இடம் பெற்ற இசைஞானி!

நியூயார்க் டைம் ஸ்கொயரில் இடம் பெற்ற இசைஞானி!

நியூயார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் இசைஞானி இளையராஜாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. 

இசைஞானி இளையராஜா இந்திய சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர். உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். 

தற்போது இளையராஜாவின் இசை பலரது வாழ்க்கையின் அங்கமாகியுள்ளது. பல இளம் இசையமைப்பாளர்கள் வந்தாலும் தற்போதும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் மணிமகுடத்தில் மேலும் ஒரு பெருமையாக புகழ்பெற்ற நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் உள்ள பில்போர்டில் இசையின் ராஜாவின் விளம்பரம் இடம் பெற்றுள்ளது.

ஸ்பாட்டிபை இசை செயலிக்கான விளம்பத்தில் இளையராஜாவின் புகைப்படம் டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்