பிரச்சினைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்; என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் : சிம்பு

பிரச்சினைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்; என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் :  சிம்பு

பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் சிம்பு மாநாடு ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இப்படம் வரும் நவம்பர் 25ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிம்பு, எஸ்.ஏ.சொ, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, என்னுடைய படங்களுக்கு பிரச்சினை வருவது வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. சுற்றி நிறைய பிரச்சினை செய்கிறார்கள். ஆனால், அப்படியான சூழலை எல்லாம் கடந்து தாக்குப் பிடித்து நிற்கும் ஒரு தயாரிப்பாளரால் மட்டும்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும் என்பது தெரிந்துவிட்டது. 
யுவன் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அனைவரும் சொன்னது போல எனக்கென்றால் பயங்கரமாக இசையமைத்துவிடுவார். இந்தப் படத்துக்காக நிறைய ரிஸ்க் எடுத்துச் செய்துள்ளேன்.
நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டுவிட்டேன். நிறைய பிரச்சினைகள் கொடுக்கிறார்கள். பிரச்சினைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி உள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்