விஸ்வாசம், கைதி பட நடிகர் ஆர்.என்.ஆர். மனோகர் திடீர் மரணம்!!

விஸ்வாசம், கைதி பட நடிகர் ஆர்.என்.ஆர். மனோகர் திடீர் மரணம்!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராக வலம் வந்த ஆர்.என்.ஆர்.மனோகர் மாரடைப்பால் இன்று(நவ.17) உயிரிழந்தார்.

1993ம் ஆண்டு வெளியான 'பேண்டு மாஸ்டர்' படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன்பிறகு  நகுல், சுனைனா நடித்த 'மாசிலாமணி' படம்,  நந்தா நடிப்பில் வெளியான 'வேலூர் மாவட்டம்' ஆகிய  படங்களையும் இயக்கியுள்ளார். 

இது தவிர 'சலீம்', 'என்னை அறிந்தால்', 'நானும் ரவுடிதான்', 'வேதாளம்', 'மிருதன்', 'கைதி' உள்ளிட்ட பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இதனை அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த 2012 ஆகஸ்ட் 16 அன்று ஆர்.என்.ஆர்.மனோகரின் மகன் ரஞ்சன் சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் உள்ள  நீச்சல்குளத்தில் மூழ்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்