ஜெய்பீம் விவகாரம் - நடிகர் சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு..!

ஜெய்பீம் விவகாரம் - நடிகர் சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு..!

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த திரைப்படம் ஜெய் பீம். இத்திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. ஆனால், படத்தில் வன்னியர்கள் குறித்து வேண்டுமென்றே தவறான குறியீடு வைத்ததாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டன. ஆனால் காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரும் சூர்யா நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையில் ஜெய்பீம் பட சர்ச்சை காரணமாக மயிலாடுதுறையில் உள்ள திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த சூர்யா நடித்த 'வேல்' திரைப்படத்தை பாமகவினர் நிறுத்தி ஆர்பாட்டம் செய்து நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள் 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 சூர்யா எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய 2  போலீசார் அவருடனே சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்