இழப்பீட்டு தொகை 5 கோடி கிடைத்ததும் பார்வதிக்கு கொடுக்கப்படும் - பாமக வழக்கறிஞர் பாலு!

இழப்பீட்டு தொகை 5 கோடி கிடைத்ததும் பார்வதிக்கு கொடுக்கப்படும் - பாமக வழக்கறிஞர் பாலு!

ஜெய் பீம் படக்குழுவினரிடமிருந்து பெறப்படும் 5 கோடி இழப்பீட்டு தொகையை பார்வதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் முழுமையாக வழங்குவோம் என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.  

ஜெய்பீம் படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, அமேசான் நிறுவனம் ஆகியவற்றுக்கு  வன்னியர் சங்கம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது.         

இதற்கிடையில் இப்படத்தில் வந்த ஒரு காட்சி குறிப்பிட்ட வன்னியர்கள் சமூகத்தினரை இழிவுபடுத்துவதாக அமைத்துள்ளது என சர்ச்சை கிளம்பியுள்ளது.இதனால் வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும, 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என கூறப்பட்டிருந்தது. 

இது குறித்து  பாமக வழக்கறிஞர் பாலு பேசும் போது , ஒரு சமூகம் ஒரு திரைப்படத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்துவதாக உணரும் போது ஒரு பொறுப்புள்ள இயக்குனர், நடிகர் பதில் அளித்திருக்க வேண்டும்.மேலும் இயக்குனர் மற்றும் சூர்யா தரப்பிலிருந்து மன்னிப்பு தெரிவித்து பதில் வரவில்லை.இந்நிலையில் நிபந்தனையற்ற மன்னிப்பு, ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.அவர்களிடமிருந்து பெரும் இழப்பீட்டு தொகை 5 கோடியை பார்வதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் முழுமையாக வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்