ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்.!

ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்.!

ஜெய்பீம் படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, அமேசான் நிறுவனம் ஆகியவற்றுக்கு வன்னியர் சங்கம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம் அமேசாம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாரட்டை பெற்றது. 

இதற்கிடையில் இப்படத்தில் வந்த ஒரு காட்சி குறிப்பிட்ட வன்னியர்கள் சமூகத்தினரை இழிவுபடுத்துவதாக அமைத்துள்ளது என சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் முழக்கமிட்டு அவரது போஸ்டர்களையும் கிழித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில், வன்னியர் சங்கம் சார்பில் ஜெய் பீம் பட நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு ரூ5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும, 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்