இதனால் தான் மாநாடு ரிலீஸ் தள்ளி போனதா..?

இதனால் தான் மாநாடு ரிலீஸ் தள்ளி போனதா..?

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது தீபாவளிக்கு  ரிலீஸ் இல்லை என்றும் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'மாநாடு'. இப்படம்  நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில்  நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'அண்ணாத்த' படத்தை மட்டும் தமிழ்நாட்டில் மட்டும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதால், 'மாநாடு, எனிமி' ஆகிய படங்களுக்கு அதிகபட்சமாக தலா 200 தியேட்டர்கள் கிடைத்தாலே அதிகம் என்ற பேச்சு எழுந்துள்ளதால் ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் 'மாநாடு' படத்தை 500க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டால் தான் எதிர்பார்த்த வசூல் கிடைக்க வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்