அண்ணாத்த படத்தின் 'மருதாணி' பாடல் இன்று வெளியீடு..!

அண்ணாத்த படத்தின் 'மருதாணி'  பாடல் இன்று வெளியீடு..!

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் 3-வது பாடலான 'மருதாணி' இன்று(அக்- 18)  மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 4 ஆம் தேதி தீபாவளி அன்று  வெளியாக உள்ளது 

ஏற்கனவே  படத்தின் டீசர், முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அண்ணாத்த படத்தின் 3-வது பாடலான 'மருதாணி' இன்று( அக்- 18)  மாலை 6 மணிக்கு வெளியாகிறது. அதன்படி இப்பாடலின் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு பக்கம் மீனா, மறுபக்கம் குஷ்பு நடுவில் ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படத்தின் தணிக்கைப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்