ரஜினியின் 'அண்ணாத்த' படத்திற்கு U/A சான்றிதழ்.!

ரஜினியின் 'அண்ணாத்த' படத்திற்கு U/A சான்றிதழ்.!

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படத்திற்கு தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் அண்ணாத்த. 

இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். முன்னதாக மறைந்த பாடகர் SPB குரலில் ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியனது. அதைத்தொடர்ந்து இன்று ரஜினி-நயன்தாரா வரும் ‘சாரக்காற்றே’ என்ற பாடல் வெளியானது. 

அதையடுத்து இப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில், 'அண்ணாத்த' படத்திற்கு தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்