பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்..!

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்..!

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 82.

நடிகர் ஸ்ரீகாந்த்-தின் இயற்பெயர் வெங்கட்ராமன். தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த படமான பைரவியில் வில்லனாக நடித்தவர். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடித்த முதல் படமான வெண்ணிற ஆடை படத்தின் கதாநாயகன் நடிகர் ஸ்ரீகாந்த். திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த் தான். சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், கமலஹாசன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த்.

Find Us Hereஇங்கே தேடவும்