பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்...

பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்...

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு இன்று காலமானார். 

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மூன்று தேசிய விருதுகளை பெற்றவர் நடிகர் நெடுமுடி வேணு.  

இவர் தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்ல போறோம், இந்தியன் 2, சர்வம் தாள மயம், நவரசா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

1978ல் நடிகராக திரைத்துறைக்குள் அறிமுகமான இவர் 3 தேசிய விருதுகள், 3 பிலிம்பேர் விருதுகள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று அவர் காலமானார். இவரது மறைவிற்கு மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகத்தினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்