அப்போ கலகலப்பு.. இப்போ கோல்மால்… ஒன்னு சேரும் வேற லெவல் கூட்டணி…

அப்போ கலகலப்பு.. இப்போ கோல்மால்… ஒன்னு சேரும் வேற லெவல் கூட்டணி…
சிவா மற்றும் ஜீவா கூட்டணி தற்போது மீண்டும் ஒரு புது படத்திற்கு இணைந்துள்ளது.
கன்னட இயக்குநர் பொன் குமரன் இயக்கத்தில் சிவா மற்றும் மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளனர். 

இந்த படத்திற்கு கோல்மால் என்று பெயரிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. 

இந்த படத்தில் ஜீவா, மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக பாயல் ராஜ்புட் மற்றும் தாராள பிரபு பட நடிகை தான்யா ஹோப் நடிக்கவுள்ளனர். இந்த படத்தினை ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரிக்கின்றனர்.
பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடங்கியது.

 இதன் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் இந்த படத்தின் படப்பிடிக்கை மொரீசியஸில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு-2 படத்தில் சிவா மற்றும் ஜீவா இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்