ஷாருக்கான் விளம்பங்களை நிறுத்திய பைஜூஸ்!!

ஷாருக்கான் விளம்பங்களை நிறுத்திய பைஜூஸ்!!

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யபட்ட நிலையில் ஷாருக்கான் விளம்பங்களை பைஜூஸ் நிறுத்தியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் நடிகர் ஷாரூக்கான் பைஜூஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்து வருகிறார். ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யபட்டுள்ளார். இதனால் பைஜூஸ் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. 

பைஜூஸ் நிறுவனம் ஆண்டுதோறும் ஷாருக்கானுக்கு  3 முதல் 4 கோடி ரூபாய் பணம் செலுத்திவந்த நிலையில் ஷாருக்கானின் மகன் ஏற்படுத்திய சர்ச்சையால் அந்நிறுவனம் தற்போது அவருடனான விளம்பரங்களை  நிறுத்தி வைத்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்