ட்விட்டர் பதிவுகளை சர்ச்சையாக்க வேண்டாம் - சித்தார்த்

ட்விட்டர் பதிவுகளை சர்ச்சையாக்க வேண்டாம் - சித்தார்த்

நடிகை சமந்தா தனது கணவரைப் பிரிந்ததாக அறிவித்தவுடன் நடிகர் சித்தார்த் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஏமாற்றுபவர்கள் எப்போதும் முன்னேறுவதில்லை என்று என் ஆசிரியர் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சித்தார்த் தன் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “என் மனதில் தோன்றுவதை ஒவ்வொரு நாளும் நான் ட்வீட் செய்கிறேன், தெருநாய்களைப் பற்றி நான் ட்வீட் செய்தால், அது அவர்களுக்கானது என்று மக்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல” என்று தெரிவித்தார்.

அத்துடன் தனது ட்வீட்களை தேவையற்ற சர்ச்சைகளுக்கு இழுத்து பெரியதாக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். என வாழ்க்கையில் விரும்பாதவர்களை விட நான் என் வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன். எனவே ஊடகங்களின் வதந்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். 

முன்னதாக சித்தார்த் மற்றும் சமந்தா இருவரும் சில காலம் காதலில் இருந்ததாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுத்தது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்