வதந்திகள் காயப்படுத்துகின்றன: நடிகை சமந்தா

வதந்திகள் காயப்படுத்துகின்றன: நடிகை சமந்தா

விவாகரத்து குறித்து இடைவிடாமல் வரும் வதந்திகள் என்னை காயப்படுத்துகின்றன என நடிகை சமந்தா வேதனை தெரிவித்துள்ளார். 

சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தா விவாகரத்து குறித்து யூகத்தின் அடிப்படையில்  செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. 

இந்த நிலையில், நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில், "என்னுடைய விவாகரத்து மிகவும் வலியானது, அதிலிருந்து வெளியேற எனக்கு இன்னும் அவகாசம் தேவை. விவாகரத்து குறித்து இடைவிடாமல் வரும் வதந்திகள் என்னை காயப்படுத்துகின்றன. ஆனால்  ஒருபோதும் சோர்ந்து போக செய்யாது" என பதிவிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்