வடிவேலு படத்திற்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என தலைப்பு!!

வடிவேலு படத்திற்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என தலைப்பு!!

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்திற்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக  படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்திற்கு நாய்சேகர் என தலைப்பு வைக்கபட்டிருந்தது. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே வடிவேலு, இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'நாய் சேகர்' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த ஆண்டு  நடிகர் வடிவேலு தன்னுடைய பிறந்தநாளை  வடிவேலு 'நாய் சேகர்' படக்குழுவினருடன் தான் கொண்டாடி மகிழ்ந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இதையடுத்து, 'நாய் சேகர்' என்கிற படத்தின் தலைப்பு, நடிகர் சதீஷ் நடித்து வரும் படத்திற்கு வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது நடிகர் வடிவேலு நடிக்கும் படத்திற்கும்  நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்