கவிஞர், பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்..!

பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்..!

பாடலாசிரியர் பிறைசூடன் (65) உடல் நலக்குறைவால் காலமானார்.

திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் (வயது 65) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று மாலை 4.15 மணியளவில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர்.

தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400க்கும் மேற்பட்ட பாடல்களும், 5000 பக்திப் பாடல்களும் இயற்றியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்