போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாருக்கான் மகனுக்கு  ஜாமீன் கிடைக்குமா?

 போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.பிறகு அவர்களிடம் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் விசாரணை முடிந்து ஆர்யன் கான் ஆகியோர்களை மும்பை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.ஆர்யன் கானின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்