45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி - ரஜினி உருக்கமான ட்வீட்..!

45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி - ரஜினி உருக்கமான ட்வீட்..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.  

சிறுத்தை சிவா இயக்கத்தில்  ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் அண்ணாத்த.

இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையி எஸ்.பி.பி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் 'அண்ணாத்த' படத்திற்காக இமான் இசையில் ரஜினியின் துவக்கப் பாடலை பாடிக் கொடுத்துள்ளார். அந்த பாடல் வெளியாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

இந்நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பி குறித்து ரஜினி தனது ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்" என பதிவிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்