போதைப்பொருள் விவகாரம்: ஷாருக்கான் மகனை விசாரிக்க அனுமதி…

போதைப்பொருள் விவகாரம்: ஷாருக்கான் மகனை விசாரிக்க அனுமதி…

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை அக்.7 வரை விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கானை காவலில் விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அக்.11 வரை ஆர்யன்கான் உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி போதைப்பொருள் தடுப்பு பிரிவு மனு அளித்துள்ளது

சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பயன்படுத்துவோரிடம் விசாரித்தால் தான் விநியோகம் செய்பவர்களை கண்டுபிடிக்க முடியும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்