சமந்தாவுடன் விவாகரத்தா? மனம் திறந்த நாக சைதன்யா.!

சமந்தாவுடன் விவாகரத்தா? மனம் திறந்த நாக சைதன்யா.!

நடிகை சமந்தா, தெலுங்க நடிகர் நாகார்ஜுனின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் பிஸியாக இருந்த சமந்தா தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் இதுகுறித்து சமந்தாவும், நாகசைதன்யாவும் எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சமந்தா திருப்பதி கோயில் சென்றிருக்கும் போதும் கூட இதுகுறித்து கேள்வி எழுப்பட்டதற்கு கோபமடைந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நாகசைதன்யா மவுனம் கலைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும், முந்தைய நாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன், நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்