விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜினா...!

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜினா...!

ஹிந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதியுடன் நடிகை ரெஜினா இணைந்து நடிக்கவுள்ளார்.

தலைவி படத்தினை தொடர்ந்து நடிகை ரெஜினா நடிப்பில் பார்ட்டி மற்றும் கள்ளபார்ட் ஆகிய படங்கள் ரிலிஸுக்காக காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் இவர் தெலுங்கில் சிரஞ்சீவி, ராம்சரணுடன் இணைந்து ஆச்சார்யா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தி பேமிலிமேன் 2 வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகியோர் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரை வைத்து புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகின்றனர். 

இதில் விஜய் சேதுபதி மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த வெப் தொடரில் தற்போது ரெஜினாவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது ரெஜினா நடிக்கும் முதல் இந்தி வெப் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்