பொங்கலுக்கு மோதிக் கொள்ளும் விஜய்- அஜித்.!

பொங்கலுக்கு மோதிக் கொள்ளும் விஜய்- அஜித்.!

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் வலிமை படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படமும் பொங்கலுக்கு வெளியாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலை கடந்த 2014ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் படமும் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித் படங்கள் இணைந்து வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்