நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவிடம் ரூ.9 கோடிக்கு ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிப்பு.!

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவிடம் ரூ.9 கோடிக்கு ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிப்பு.!

ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா செல்போன் மற்றும் இதர சாதனங்களில் ரூ.9 கோடி மதிப்பிலான ஆபாச வீடியோக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா வெப்சீரிஸ் எடுப்பதாக பெண்களை ஏமாற்றி ஆபாச படங்கள் எடுத்ததாகவும் இதற்காக தனியாக செல்போன் செயலி தயாரித்து ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ததாகவும் கூறி சமீபத்தில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜ் குந்த்ரா மீது 1,400 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். போலீசாரின் விசாரணையில் கணவர் ராஜ் குந்த்ராவின் குற்றத்தில் ஷில்பா ஷெட்டிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நேற்று மும்பை நீதிமன்றம் ஆபாச படங்கள் தயாரித்து வெளியிட்ட வழக்கில் கைதான நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து ஜாமின் வழங்கியது. இதற்கு நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக ராஜ் குந்தராவின்  செல்போன், லேப்டாப் மற்றும் ஹார்ட் ட்ரைவ் ஆகியவற்றில் இருந்து சுமார் 119 ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வீடியோக்களை ரூ. 9 கோடிக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்