SIIMA விருதுகளை அள்ளிய "நம்ம ஊர் பொண்ணு" ஐஸ்வர்யா ராஜேஷ்!

SIIMA விருதுகளை அள்ளிய

 நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் சிறந்த நடிகைக்கான SIIMA விருதுகளை தட்டிச் சென்றுள்ளார். 

 திரைப்படங்களில் தனக்கே உரித்தான பாணியில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருவபர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

ஹைதராபாத்தில்  நேற்று மற்றும் நேற்றைய முன்தினம் சைமா விருது வழங்கும் விழா  நடைபெற்றது.2020 சிறந்த நடிகைக்கான விருதுகளை அதாவது தமிழில் க/ தமிழில் பெ. ரணசிங்கம் திரைபடத்துக்கும், தெலுங்கில் World Famous Lover  படத்துக்கும்  SIIMA விருதுகளை தட்டிச்சென்றுள்ளார்.

மேலும் இது குறித்து தன்னுடைய டிவிட்டர் பதிவில் பதிவிட்டு தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார்.மேலும் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படம் 2020-ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான 7 சைமா விருதுகளை பெற்று அசத்தியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்