மீரா மிதுன் நடிக்கும் பேய் படம் 90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவு

மீரா மிதுன் நடிக்கும் பேய் படம் 90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவு..!
செல்வ அன்பரசன் இயக்கத்தில் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில்  தேனி பாரத் R. சுருளிவேல் தயாரிக்கும் படத்துக்கு  "பேய காணோம்" என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் தருண் கோபி,  கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம்,  முல்லை, ஜெயா டிவி ஜேக்கப், செல்வக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

நாம் எல்லோரும் வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம், நண்பனை காணோம் இப்படி ஏதாவது ஒன்றை தேடியிருப்போம். முதன் முதலாக இப்படத்தில் ஒரு பேயை தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. படத்தின் கதாநாயகி மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைத்தவுடன் படத்தின் இதர காட்சி படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்