நடிகர் 'சோனு சூட்'டுக்கு சொந்தமான இடங்களில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு!

நடிகர் 'சோனு சூட்'டுக்கு சொந்தமான இடங்களில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு!

நடிகர்  சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 28 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

இது  குறித்து வருமானத்துறை மும்பை,லக்னோ,கான்பூர்,ஜெய்பூர் ,டெல்லி மற்றும் குருராமில் உள்ள 28 வளாகங்களில் ஐடி சோதனை நடைபெற்றது என்றும் இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.சோனு சூட் கொரோனா காலத்தில் மக்களுக்கு  பல்வேறு எண்ணற்ற உதவிகளை செய்து பிரபலமானார்.அதுமட்டுமல்லாமல் அவர் பாஜகவில் இணையப்போவதாகவும் தகவல் வெளியானது.இந்நிலையில் அரசியல் காரணமாகவும் இந்த ஐடி ரெய்டு நடந்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Find Us Hereஇங்கே தேடவும்