கணவர் ராஜ் குந்த்ரா வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் ஷாக்கிங் வாக்குமூலம்..!

கணவர் ராஜ் குந்த்ரா வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் ஷாக்கிங் வாக்குமூலம்..!

கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப்படம் எடுத்தது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச வீடியோக்களை தயாரித்ததாக தொழிலதிபரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவை  மும்பை போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ராஜ் குந்த்ரா மீது 1,400 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதோடு ராஜ் குந்தராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டியின் வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்து ஒப்படைத்தனர். 

அந்த வாக்குமூலத்தில் ஷில்பா ஷெட்டி, "நான் என் வேலையில் மிகவும் பிஸியாக இருந்தேன். அதனால் என் கணவர் ஆபாச படம் எடுத்து வந்தது எனக்கு தெரியாது. ஹாட்ஷாட்ஸ், பாலிஃபேம் ஆகிய செயலிகள் குறித்தும் எனக்கு தெரியாது" என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் கணவர் ராஜ் குந்த்ராவின் குற்றத்தில் ஷில்பா ஷெட்டிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்