நாஸ்டால்ஜியாக்குள் தள்ளும் ”டேக்சி’ஸ் காஸ்ட்டில்”!.. – கவனம்பெற்ற ட்வீட்…

நாஸ்டால்ஜியாக்குள் தள்ளும் ”டேக்சி’ஸ் காஸ்ட்டில்”!.. – கவனம்பெற்ற ட்வீட்…

ஸ்மார்ட் போன்கள் கைகளில் தவழ்வதற்கு முன்பொரு காலத்தில் விடலைகளும், மங்கைகளும் தொலைக்காட்சிப்பெட்டி முன் தான் லிவிங்ஸ்டன்.

சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கென்று பிரத்யேக ரசிகர் பட்டாளம் இருக்கும். அவை, நாடகம் பார்க்க மல்லுகட்டும் தாய்மார்களை ஒரங்கட்டி ரிமோட்களை தங்கள் வசமிருந்து நழுவாமல் பாதுகாக்கும்.

இதுபோன்று 90களின் குழந்தைகள் சண்டையிட்டாவது பார்க்கத்துடித்த விருப்பமான ஒரு நிகழ்ச்சிதான் ” டேக்சி’ஸ் காஸ்ட்டில்”, போகோ தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்து ஒளிப்பரப்பான ஜப்பானிய நிகழ்ச்சியான இது, பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ஜாவித் ஜாஃப்ரியின் பின்ணணி குரலில் இந்தியா முழுதிலும் இந்தியில் வலம் வந்தது.

இந்நிகழ்ச்சியில் முடிவில் ஒளிப்பரப்பாகும், நிலவு போன்று அமைக்கப்பட்ட அரங்கில் 12 பேர் பங்கேற்கும் இறுதி சுற்றில்  9 பேர் வெற்றியடைவார்கள். இதுகுறித்தான மீமை ட்விட்டரில் பதிவிட்டு, தான் தோல்வியுறும் மூவரையும் கவனித்துள்ளதாகவும், இதுவரை எப்படி டேக்கிஸ் காஸ்ட்டிலில் வெற்றியடைகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது பல ரசிகப்பெருமக்களால் ரீ-ட்வீட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்