அடுத்த வாரம் வெளியாகிறது வலிமை டீஸர்? : குஷியில் ரசிகர்கள்

அடுத்த வாரம் வெளியாகிறது வலிமை டீஸர்? : குஷியில் ரசிகர்கள்

அஜித்தின் வலிமை படத்தின் வலிமை டீஸர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜா இசையும் அமைத்துள்ளனர்.

வலிமை படத்தின் போஸ்டர், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து வருகிறது. 

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் டீஸர் அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்