சிம்புவின் சூப்பர் சர்ப்ரைஸ்: ஆர்வத்தில் ரசிகர்கள்

சிம்புவின் சூப்பர் சர்ப்ரைஸ்: ஆர்வத்தில் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடிகர் சிம்பு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளதாக தனது இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல்-2021 போட்டி தொடரின் மிஞ்சிய போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. 

இந்நிலையில், நடிகர் சிம்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சி அணிந்த போட்டோவை தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில், “CSK x STR சர்ப்ரைஸ்-க்கு தயாராக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.அந்த போட்டோ சிம்பு பாடுவதற்கு ரெடியாக ஸ்டூடியோவில் இருப்பது போல் உள்ளது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு ஆல்பம் பாடல் பாட இருக்கிறார் என தோன்றசெய்கிறது.

Find Us Hereஇங்கே தேடவும்