ரசிகர்களின் செயலுக்கு ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்..!

ஆடுவெட்டி ரத்தாபிஷேகம்: ரசிகர்களின் செயலுக்கு ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்..!

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது ரசிகர்கள் நடந்துகொண்ட செயலுக்கு ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், சதீஷ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், அண்ணாத்த திரைப்படத்தின் கட் அவுட்டிற்கு ரசிகர்கள் ஆடுவெட்டி ரத்தாபிஷேகம் செய்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது. 

இந்த நிலையில், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்