துபாயின் குறுக்குச் சந்திலிருந்து வைகைப்புயலை வாழ்த்திய இயக்குநர்!..

துபாயின் குறுக்குச் சந்திலிருந்து வைகைப்புயலை வாழ்த்திய இயக்குநர்!..

வைகைப்புயல் வடிவேலுவிற்கு அவரது பாணியிலேயே இயக்குநர் சேரன் தனது  வாழ்த்து செய்தியை பகிர்ந்துகொண்டுள்ளார்.

வெற்றிகொடிக்கட்டு படத்தின் எல்லோர்க்கும் பிரபல்யமான துபாய்  நகைச்சுவையை ஞாபகப்படுத்தும் விதமாக இயக்குனர் சேரன் வடிவேலுவுக்கு கூறியுள்ள தனது ட்விட்டர் வாழ்த்தில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா..  நம்பர் 6, விவேகானந்தர் தெரு,  துபாய் குறுக்குச்சந்துல  இருந்து பேசுறேன்.. 

நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா..  காமெடில நீங்க எப்பவும் 'கிங்'.. " என்று தனது அகம் நிறைந்த வாழ்த்தை  தெரிவித்துள்ளார்

Find Us Hereஇங்கே தேடவும்