தீபாவளிக்கு ரிலீஸாகும் 3 படங்கள்... கொரோனாவுடன் போட்டியா?

தீபாவளிக்கு ரிலீஸாகும் 3 படங்கள்... கொரோனாவுடன் போட்டியா?

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என  படக்குழு அறிவித்துள்ளது.

இதன்மூலம் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் தீபாவளி ரேசின் சிம்புவின் மாநாடு களமிறங்குகிறது.

அத்துடன் அஜித்தின் வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் பட்சத்தில் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மூன்று ட்ரீட்கள் காத்திருக்கின்றன.

ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் பட்சத்தில் பண்டிகையில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவது பாதுக்காப்பாக இருக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்