சங்கர் படங்களுக்கு நோ சொன்ன வைகைப்புயல்.!

சங்கர் படங்களுக்கு நோ சொன்ன வைகைப்புயல்.!

இயக்குநர் சங்கர் தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவாகும் படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று வைகைப்புயல் வடிவேலு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவர் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கினார். இந்த படம் சிம்புதேவன் இயக்கத்தில் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் உருவாகி நல்ல வசூலை குவித்தது.

இதனை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பாளர் சங்கர், இயக்குனர் சிம்புதேவன், நடிகர் வடிவேலு திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கினர்.

இதற்காக பெரும் பொருட் செலவில் அரங்கங்களும் அமைக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால் சில நாட்கள் மட்டுமே இந்த படப்பிடிப்பு நடந்தது. 

பின்னர் சில கருத்துவேறுபாடு காரணமாக படப்பிடிப்பு பாதியில் நின்றது. இதனால் பல கோடி ரூபாய் நஷடம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் சங்கத்தில் சங்கர் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் தீர்வுகான முடியவில்லை. 

இந்த பிரச்சனை காரணமாக தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக வடிவேலுவால் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் லைகா நிறுவனம் தலைவர் சுபாஸ்கரன் இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

மேலும் இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பெற்ற சம்பளத்திற்காக லைகா நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து கொடுப்பதாகவும் வடிவேலு ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் வடிவேலு நடிக்கவுள்ள படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தமிழ்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய வடிவேலு இனி தான் சங்கர் தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவாகும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.

மேலும் தான் இனி சரித்திர படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும், அரசியலுக்கு வருவது இப்போது இல்லை என்றும் அப்படி வாய்ப்பு வந்தால் நடிகர் உதயநிதியுடன் இணைந்து நடிப்பேன் என்று தெரிவித்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்