விநாயகர் சதுர்த்தி தினத்தில் வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் "அண்ணாத்த"!

விநாயகர் சதுர்த்தி தினத்தில் வேட்டி சட்டையில் மாஸ் காட்டும்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். அந்தத் திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்திருந்த நிலையில், தற்போது  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இன்று மாலை ஆறு மணிக்கு அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.இந்த செய்தி ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்