ரஜினியின் 'அண்ணாத்த' பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு..!

ரஜினியின் 'அண்ணாத்த' பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு..!

'அண்ணாத்த'. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினியின் 168வது படம் ’அண்ணாத்த’. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் கிட்டதட்ட நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. 

இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் பர்ஸ்ட் லுக் நாளை காலை 11 மணிக்கும் மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்