ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய கங்கனா ரனாவத்.!

ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய கங்கனா ரனாவத்.!

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் நடிகை கங்கனா ரனாவத். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் தலைவி. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் கங்கனாவுடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போடப்பட்ட இந்த படம் வரும் செப்டம்பர் 10 தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் இன்று சென்னை மெரினாவில் அமைந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்