’ரைட்டர்’ ப்ரிவ்யூ ஷோவின் பிரபலங்களின் ரிவ்யூ

’ரைட்டர்’ ப்ரிவ்யூ ஷோவின் பிரபலங்களின் ரிவ்யூ

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரடொக்ஷன்ஸ், லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸ் இணைந்து பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ரைட்டர்’.இந்த படத்தின் நாயகனாக நடிகர் சமுத்திரகனி நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் இப்படம் காவல்துறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் என்று தெரிவிகிறது.

இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த சில பிரபலங்கள் தங்கள் கருத்துகளை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். 

ரைட்டர் படத்தை பார்த்த எழுத்தாளர் தமயந்தி, தனது இணையப்பக்கத்தில் அப்படம் குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், ” மனித மாண்பை, அதன் தன்மைகளை , அதன் இரக்கமற்ற அதிகாரத்தை கேள்விக்கேட்கும் கலைப்படைப்பை “ ரைட்டர்” திரைப்படமாக்கி இருக்கிறார் ப்ராங்கிளின் . 

சினிமாவை தன் வாழ்வென நேசிக்க நினைக்கும் ஒருவரால் மட்டுமே இதை துணிந்து படமாக்க முடியும். சிலநேரம் அதிகாரங்களுக்கு எதிராய் மெளனமாக நின்ற குற்றவுணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. அந்த மனவுலகம் மிகவும் நிஜமானதாக இருக்கும். அந்த வலியே அதன் பலம். வாழ்த்துக்கள் ப்ராங்கிளின். பெரும் வெற்றிக்கு என் பேரன்பு ” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கபாலி படத்தில் நடித்திருந்த நடிகர் லிங்கேஷ் தனது இணையப்பக்கத்தில் ”ரைட்டர் திரைப்படம் உங்களை நம்மை நோக்கி வருகிறது மிகப்பெரிய கேள்விகளோடு கனவுகளோடு திரையுலகில் இருந்து வெளி உலகை கலமாட வருகிறது. என்று தெரிவித்ததுடன் மீண்டும் ஒருமுறை திரையில் காண ஆவலோடு இருக்கிறேன்” என்று பாராட்டியுள்ளார்.

இதற்கிடையில், இயக்குநர் சுப்ரமணிய சிவா ரைட்டர் படம் குறித்து தனது இணைய பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் “நீலம் மிகச்சரியான படைப்புகளையும், கலைஞர்களையும் இந்த சினிமாவிற்கு தந்துகொண்டேயிருக்கும்.

அதில் இந்த் ரைட்டர் படமும் அதிமுக்கியமானதாக இருக்கும்.விரைவில் வெளியாகவிருக்கும் படத்தை நீங்களும் கொண்டாடுவீர்கள். தவிர்க்கமுடியாத படைப்பு. தவிர்க்கமுடியாத வெற்றியையும் தரும்.மகிழ்ச்சி...!சிலிர்ப்பு" என்று தெரிவித்துள்ளார்

Find Us Hereஇங்கே தேடவும்