நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்.!

நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்.!

நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இணையத்தில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பாக நடிகை மீரா மிதுனை போலீஸார் கேரளாவில் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மீரா மிதுனை தேனாம்பேட்டை எம்கேபி நகர் எழும்பூர் ஆகிய காவல் நிலையங்களிலும் மீரா மிதுன் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அடுத்த கட்ட நடவடிக்கையை போலீஸார் துரிதமாக எடுத்து வருகின்றனர்.

அதன்படி தொழிலதிபர் ஜோ மைக்கல் என்பவரை மீரா மிதுன் மிரட்டியதாக ஏற்கெனவே புகார் அளித்திருந்த நிலையில் அதற்கான 30 பக்க குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் போலீஸார், எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதேபோன்று நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியது தொடர்பாக 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தற்போது எழும்பூர் போலீஸார் மீரா மிதுன் 30 பக்கக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்