பிசாசு-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பிசாசு-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

மிஷ்கினின் பிசாசு-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

மிஷ்கின் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து பிசாசு இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. 

இதன்படி, கடந்த ஆண்டு தனது பிறந்த நாளன்று பிசாசு-2 திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியிட்ட இயக்குநர் மிஷ்கின், 2020 டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கினார். இந்த படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்க, கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் காட்சி ஒன்றில் வருகிறார்.

இந்த நிலையில், பிசாசு-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்