21 படம்: அடுத்த 2 வருஷத்துக்கு விஜய் சேதுபதிய அடிச்சிக்க ஆளே இல்லை

21 படம்: அடுத்த 2 வருஷத்துக்கு விஜய் சேதுபதிய அடிச்சிக்க ஆளே இல்லை

நடிகர் விஜய்சேதுபதி நாயகனாக மட்டுமில்லாமல், ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் அவர் 'உப்பெனா' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 

தற்போது இவர் கைவசம் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், இடம் பொருள் ஏவல், காத்து வாக்குல ரெண்டு காதல், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 46வது படம், விக்ரம், மும்பைகர் (ஹிந்தி), காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்துமஸ், 19 (1), மைக்கேல் 'த பேமிலிமேன்' இயக்குனர்கள் ராஜ், டீகே இயக்கத்தில் வெப் தொடர் என அடுத்தடுத்து தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து இருக்கிறார். அதிலும் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுமட்டுமின்றி இவருக்கு தொடர்ந்து பல படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாகவும், தயாரிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் கதை ஓகேவாக இருந்தால் கூட அதற்கு ஒப்பந்தம் செய்துவிடுகிறார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Find Us Hereஇங்கே தேடவும்