கடந்த 2019ம் ஆண்டு 'ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது.
கடந்த 2019ம் ஆண்டு 'ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் அடுத்தப்பாகம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் உருவானது. இதற்கிடையில் இந்த படத்தினை தயாரித்த சோனி மற்றும் மார்வெல் நிறுவனங்களுக்கு இடையே கருத்து வேறுப்பாடு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து சில பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு , 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தை இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்தன.
மிகவும் ஸ்லண்டாக உருவான இப்படம் குறித்து படக்குழு எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. இந்த நிலையில், நேற்று (23.08.2021) 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தின் ட்ரைலர் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது.
இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' பட ட்ரைலரை அதிகாரப்பூர்வமாக படக்குழு இன்று காலை வெளியிட்டது. இதில் ஸ்பைடர் மேம்னுடன் டாக்டர் ஸ்ட்ரேஞ்சசும் இணைந்துள்ளனர்.
மேலும் இந்த ட்ரைலரில் ரசிகர்களை மிகவும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைய வைக்கும் விஷயம் என்னவென்றால் இந்த பாகத்தில் டாக்டர் ஆக்டோபஸ் கதாபாத்திரமும் இடம்பெற்றிருப்பது. இது தற்போது இணையத்தில் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.