நடிகை மீரா மிதுனை மற்றொரு வழக்கில் கைது செய்ய எம்.கே.பி நகர் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நடிகை மீரா மிதுனை மற்றொரு வழக்கில் கைது செய்ய எம்.கே.பி நகர் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனை மற்றொரு வழக்கில் காவலில் விசாரிக்க மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகாரில் கடந்த 14ம் தேதி கைதானார் நடிகை மீரா மிதுன். இதனை தொடர்ந்து போலீஸார் இவரையும் அவரது ஆண் நண்பரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் ஜாமீன் கோரொ மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் ஜோ மைக்கேல் என்பவர் கடந்த ஆண்டு கொடுத்த கொலை மிரட்டல் புகாரில் சென்னை எம்.கே.பி நகர் போலீஸார் மீரா மிதுனை காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்துள்ளனர்.