நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ரானி ஆகியோர் போதைப் பொருள் உபயோகம் செய்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ரானி ஆகியோர் போதைப் பொருள் உபயோகம் செய்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகம் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ரானி மற்றும் வீரன் கண்ணா, ரவிசங்கர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்தில், நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.