நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் - சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் - சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த விட்ஜா என்பவர் நடிகர் ஆர்யா மீது சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். 

கடந்த மார்ச் மாதம் கொடுக்கப்பட்ட இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிடக்கோரி, விட்ஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

 இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சாயிஷாவை விவாகரத்து செய்து விட்டு தன்னை திருமணம் செய்வதாக கூறி, ஆர்யா பண மோசடியில் ஈடுபட்டதாக விட்ஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து பதிலளிக்க சிபிசிஐடி போலீசார் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த  வழக்கை ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்