ரோல்ஸ் ராய்ஸ் வழக்கில் அபராதமாக ரூ.1 லட்சம் செலுத்த விரும்பவில்லை- நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்

ரோல்ஸ் ராய்ஸ் வழக்கில் அபராதமாக ரூ.1 லட்சம் செலுத்த விரும்பவில்லை- நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டிய விவகாரத்தில் அபராதம் கட்ட தயாராக இல்லை என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டிய விவகாரத்தில் விஜய்க்கு அபராதமாக 1.லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக அரசிடம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தவிடப்பட்டது.  

இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சுப்பிரமணியிடம்  நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கொரோனா நிவாரண நிதியாக அரசிடம் 25 லட்சம் ரூபாயை ஏற்கனவே கொடுத்துள்ளதாகவும், சொகுசு கார் வழக்கில் அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன்பு விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்