மாஸ் லுக்கில் தனுஷ்: D43 First Look Poster இன்று வெளியானது

மாஸ் லுக்கில் தனுஷ்: D43 First Look Poster இன்று வெளியானது

நடிகர் தனுஷின்  43வது படத்தினை கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

தொடக்கத்தில் பெயரிடப்படாத இப்படத்திற்கு D43 என்று அழைக்கப்பட்டது. மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் ஷர்பு மற்றும் சுஹாஸ் ஆகியோர் இப்படத்திற்கு கதை எழுதுகின்றனர். தனுஷ் இப்பட பாடல்களை எழுதுவார் என்றும் சில பாடல்களை அவரே பாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் தலைப்பு மாறன் என்று அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் தனுஷ் மாஸ் லுக்கில் உள்ளார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்